Mnadu News

மகாலட்சுமியை வணங்கும் நவராத்திரியின் ஏழாவது நாள்

அக்டோபர் 2 நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று செல்வத்தின் திருவுருவமான மகாலட்சுமியை வணங்கும் தினமாகும். செல்வமாக கருதும் அன்னை மகாலட்சுமி ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், சங்கு, சக்கரம், வஜ்ரம் போன்ற ஆயதங்களையும் தாமரை,மதுக்கலயம், கமண்டலம், மணி ஆகியவற்றைருடன் அருள்புரியும்.

நவராத்திரி கொலு அலங்காரத்தில் மகாலட்சுமியின் கொலு வைத்து அதன் இருபுறமும் யானை வைக்க வேண்டும். அம்மாளுக்கு பூஜை செய்ய வெள்ளை மலர்களால் கோலமிட வேண்டும். நறுமண மலர்கள் கொண்டு கோலமிட வேண்டும். தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை போன்ற பூக்களை கொண்டு கோலமிடலாம்.

மகாலட்சுமி தேவிக்கு நைவேத்தியம் படைக்க கற்கண்டு சாதம் செய்து வணங்கி, பிரசாதமாக அளிப்பதன் மூலம் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ முடியும்.

நவராத்தியின் ஏழாவது நாளில் வித்யா லட்சுமி உருவத்தில் அலங்கரிக்க வேண்டும். 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜை செய்ய வேண்டும். எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு போன்றவை படைத்தது வழிபாடு செய்யலாம். பிலஹரி ராகத்தில் பாடி பூஜை செய்ய வேண்டும்.

Share this post with your friends