Mnadu News

மக்கள் தொகையில் இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா: ஐ.நா தகவல்.

உலக மக்கள் தொகை நிலை – 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ”மக்கள் தொகையில் இந்தியா, இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும். இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142 கோடியே 86 லட்சமாக இருக்கும். அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சமாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends