மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது ஊரறிந்த உண்மை. அதனால் தான் மஞ்சளை நீரில் கரைத்து வீடெங்கும் தெளிப்பர். நோய்க்கிருமிகள் அண்டவே அண்டாது என்பது அறிவியல் உண்மையென்றாலும் மங்களகறமாக இருக்க மஞ்சளை நல்ல நாள் பெரிய நாட்களில் வீடுகளில் தெளிப்பது வழக்கம்.
நெஞ்சு சளி, இருமல் வயிற்றுவலி, சேற்றுப்புண், கால் ஆணி, நகச்சுற்று, சிறுநீர்க்கோளாறு என பிராண்டட் வியாதிகளுக்கு ஒற்றை அருமருந்து மஞ்சள் தான்.
நீங்கா நெஞ்சுசளி நீங்க:
சளியென்றாலே பலருக்கும் சனியாகத் தான் இருக்கும். இதில் நெஞ்சு சலி என்றால் சொல்லவே வேண்டாம். உடலை உருக்கி எடுத்து விடும் விரும்பியதை உண்ணவிடாது. நெஞ்சுசலி வந்துவிட்டதா நேராக அடுப்படிக்குச் செல்லுங்கள் ஒரு தம்ளர் சூடான் பசும்பாலில் சிறுது மஞ்சள் தூள் அரை ட்யூஸ்பூன் அரை டீஸ்பூன் மிளகுத் தூள் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச் சளி கரைந்து போய்விடும்.
சளி இருக்கும் பெரும்பாலோனோருக்கு இருமலும் உடன் வந்துவிடும் . வலியுடன் கூடிய வறட்டு இருமலுக்கும் தீர்வு வைத்திருக்கிறாள் மூலிகை ராணி மஞ்சள். மஞ்சள் தூளைத் தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட இருமலுக்கு பை பை சொல்லலாம்.
தேகம் மிளிர மஞ்சள்:
மஞ்சள் பூசிக் குளித்தால் முகம் அதிர்ச்சி அடைந்து விடும். சருமம் உலர்ந்துவிடும் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரத்தையெல்லாம் நம்பிவிட வேண்டாம்.காயவைத்த பசு மஞ்சள், வெள்ளை மிளகு, நெல்லி வித்து வேப்பம் வித்து கடுக்காய்த்தூள் பொருட்களை சம அளவு எடுத்து வெயிலில் உலர்த்தவும்.
மிஷினில் கொடுத்து பவுடராக அரைத்துக் கொள்ளவும் அருமையான மூலிகைப் பொடி தயார். இந்தத் தூளில் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து குழைத்து முகம் கழுத்து கைகால்களில் தடவி நன்றாக குளிக்கவும். பளபளப்பான சருமம் கிடைக்கும்.
மஞ்சள் அக்மார்க் முத்திரையிடப்பட்ட கிளென்சர் என்பதால் சருமம் சுத்தமாகிறது. தினமும் தேய்த்துக் குளித்தால் மேனி பொன்மேனியாக மாறிவிடும்.
சர்வ வித்தகன் மஞ்சள்:
ஆறாத புண்கள், கட்டிகள், கால் ஆணி என அனைத்திற்கும் மஞ்சள் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.