வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வன்முறைக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,தலைமைச் செயலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகை செல்லும் வழியில் உள்ள நூபு லால் காம்ப்ளெக்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டனர். அவர்கள் முதல் அமைச்சரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். முதல் அமைச்சர் ராஜினாமா செய்யக் கூடாது என்று வலியுறுத்தினர். அவரது ராஜினாமா கடிதத்தையும் கிழித்தெறிந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குழுவின் தலைவர் ஷேத்ரிமயும் சாந்தி கூறுகையில், “இது நெருக்கடியான நேரம். இந்தத் தருணத்தில் முதல் அமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்யக் கூடாது. அரசாங்கம் இப்போது உறுதியாக நின்று கலவரக்காரர்களை ஒடுக்க வேண்டும் என்றார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More