கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு அணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக 36 அடி கொள்ளளவு கொண்டு நிரம்பியது. இந்தநிலையில் சுற்றுவட்டார கிராம விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க ஸ்டாலின் அணையை விவசாய பாசனத்திற்கு திறந்து விட உத்தரவிட்டிருந்தார்.அதனடிப்படையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மணிமுத்தாறின் விவசாய பாசன வாய்க்கால் மதகை திறந்து வைத்து நீரை மலர்தூவி வரவேற்றார். உடன் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன், மாவட்டத் துணைச் செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More