டெல்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக டெல்லி முன்னாள் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சிசோடியா கைது செய்யப்பட்டார்.பின்னர் சிசோடியாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் விசாரணை நடைபெற்றது. இதனிடையே அமலாக்கத்துறையும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.தற் சமயம், சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது சிபிஐ காவலை ஜூன் 2 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதே நேரம்.சிசோடியாவின் அமலாக்கத்துறை காவலும் மே 23 நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More