Mnadu News

மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூலகம் அடுத்த வாரம் துவக்கம்! திறப்பு விழா பணிகள் மும்முரம்! 

மதுரையில் பிரம்மாண்ட நூலகம்: 

 ஆசியாவிலே பிரமாண்ட நூலகமாக பார்க்கப்பட்டது சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் திகழ்ந்து வருகிறது. தற்போது இதையெல்லாம் தாண்டி  பிரம்மாண்டத்தின் உச்சமாக மதுரை புது நத்தம் சாலையில் சர்வதேச அளவில் அதன் தரத்தில் 114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. 99 கோடி நூலக கட்டிடத்திற்கும், 10 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், 5 கோடி தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கவும் செலவிடப்பட்டுள்ளது. இந்த நூலகம் கீழ்தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

நூலகத்தில் உள்ள பிரத்யேக வசதிகள் : 

பொதுப்பணித்துறையின் சார்பில் ஓராண்டு 4 மாத காலத்திற்குள் இக்கட்டடப் பணிகள் மிக விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள  அனைவருக்கும் இந்நூலகம் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழ் புத்தகங்கள், 2 லட்சத்து 75 ஆயிரம் ஆங்கில புத்தகங்கள், 6 ஆயிரம் இ-புத்தகங்கள் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பழங்கால ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்படுவதைப் போன்று, இந்த நூலகத்திலும் பழங்கால ஓலைச்சுவடிகளை நூலகத்திற்கு படிக்க வருகின்றவர்களுக்கு காட்சிப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.  

எகிறும் எதிர்பார்ப்பு : 

நூலக பணிகள் வேகம் எடுத்து வரும்  நிலையில், வரும் ஜூலை 15 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். மதுரையில் உள்ள பிரம்மாண்ட கலைஞர் நூலகம் அடுத்த வருடம் திறக்கப்படும் என்பதால் உலக அளவில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.  

Share this post with your friends