நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் அதே நாளில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை தொடுத்திருந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள உத்தரவில் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்றும் ,மேலும் சித்திரை திருவிழா நடைபெறுவதை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் இடமான மதுரையில் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் எனவும் உத்தரவிட்டார் . மேலும் மற்ற மாநிலங்களில் மட்டும் ஒரு மணி நேரம் வரை ஒட்டு போடும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது . விழாக்களுக்காக தேர்தல் நடக்கும் தேதியை ஒத்திவைக்க முடியாது என்றும் .ஏனென்றால் தேர்தலில் கணக்கிடப்படும் வாக்குப்பதிவு சதவித்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் .

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More