மதுபானங்கள் பரிமாறுதல் தொடர்பான தமிழக அரசின் திருத்த விதிகளை எதிர்த்து வழக்குரைஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்குரைஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், திருமணம் போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் என்பதால மதுபானங்கள் பரிமாறுதல் விதி திருத்தத்தை அனுமதித்தால், அது பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்கும்.எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாங்களை கேட்ட நீதிபதிகள், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதோடு,மனுதாரர் தாக்கல் செய்ய உள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More