புதுச்சேரி உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்கிட புதுவை ஸ்ரீ அரவிந்த் சொசைட்டி சார்பில் சிறை வானொலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை சிறைத்துறை தலைவர் ரவிதீப் சிங் சாகர் மற்றும் மும்பை எஸ்பிஐ ஆப்பரேட்டிங் அதிகாரி கணேசன் ஆகியோர் ஒளிபரப்பை தொடங்கி வைத்தனர். சிறைவாசிகளின் தனித்திறமைகள் மற்றும் சிறைவாசிகளின் குடும்பத்தினர் இவர்களிடையே உள்ள விழிப்புணர்வு பேச்சுக்கள் பாடல்கள் நாட்டுப்புற பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிநாடாவில் பதிவு செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சிறையில் பல்வேறு வகையான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறைவாசிகளின் எண்ணத்தில் பல்வேறு நல்ல சிந்தனைகள் மாற்றங்களையும் உருவாக்கி வரும் புதுச்சேரி சிறை துறையின் இது புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது என்றும் சிறை துறையின் தலைமை கண்காணிப்பாளர் அசோகன் தெரிவித்தார். மேலும் டாக்டர் சௌந்தராஜன் தண்டனை கைதிகளுக்கு நடத்தப்படும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பினை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார்.