Mnadu News

மத சுதந்திரம் குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டு: நிராகரித்த இந்திய வெளியுறவுத் துறை.

சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “தவறான தகவல்களின் அடிப்படையில், உள்நோக்கம் கொண்ட அதிகாரிகள் இத்தகைய அறிக்கையை அளித்துள்ளார்கள். அமெரிக்கா உடனான உறவுக்கு இந்தியா மிகுந்த மதிப்பளிக்கிறது.ஆனால், உள்நோக்கத்துடனும், ஒரு சார்புடனும் இதுபோன்ற அறிக்கைகளை சில அமெரிக்க அதிகாரிகள் வெளியிடுகின்றனர். இதுபோன்ற அறிக்கைகள் அவர்களின் நம்பகத்தன்மையை சிதைப்பதாகவே அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends