Mnadu News

மனம் புண்படாத சொற்களை கையாள முயற்சி:தலைமை நீதிபதி அறிவிப்பு.

ஒடிசாவில், கட்டாக்கில் ஒடிசா ஜூடிசியல் அகாடமியில் காகிதமில்லா டிஜிட்டல் மயமாக்கல் நீதிமன்றங்கள் மற்றும் இ-முயற்சிகள்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்,கடந்த காலத்தில் வெளியான 376வது தீர்ப்பை படித்து பார்த்தால்.அதில் பாதிக்கப்பட்டவள் மேல்முறையீட்டாளரால் துன்புறுத்தப்பட்டாள்” என்று ஒருமையில் இருக்கும் அல்லது அவள் ஒரு வைப்பாட்டி என்ற சொற்றொடர் வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.அதே போல் ஜாமீன் உத்தரவுகளில், கோகோயின் போதைப்பொருளுடன் நீக்ரோ கைது செய்யப்பட்டார் என்று இருக்கும். இந்த சொற்களின் வாயிலாக அவர்களை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீதித்துறைக்கு கிடையாது. ஆனால் அது அவ்வாறாக பொருள் கொள்ளப்படும். எனவே மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்ப நீதித்துறையிலும் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.அதற்காக சமீபத்தில் சொற்களஞ்சிய கையேடு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளோம்.இருந்தாலும் அதை மேம்படுத்துவதற்காக சட்டப்பூர்வ சொற்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளளோம்.அதே நேரம், யாருடைய மனமும்; புண்படாத வகையில் நீதித்துறையில் சொற்களை கையாள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends