தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ராஜா பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக சங்கரன்கோவில் பகுதியில் இயங்கி வரும் விண்மீன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வரும் 50 குழந்தைகளுக்கு பண்டிகை காலங்களில் உணவு உடை வாங்கி கொடுத்து வருகிறார்.
அதன்படி இம்மாதம் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், விண்மீன் காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை துணிக்கடைகளுக்கே அழைத்துச் சென்று புத்தம் புது ஆடைகளை வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளார்.