மணிப்பூரில் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு நடத்திய பேரணிக்கு எதிராக எதிர்தரப்பும் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.அதையடுத்து வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. தெருக்களில் இருந்த கார்கள், பைக்குகள், கடைகளுக்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதனை தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.தற்போது, நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளநிலையில், கலவரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். அதோடு, 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More