சென்னையில் கடந்த 14 ஆம் தேதி செய்தியாளர்ளை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தி.மு.க.,வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, ‛தி.மு.க., மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இழப்பீட்டு தொகையாக 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இதை, 48 மணி நேரத்துக்குள் செய்யாவிட்டால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை,‛ஆர் எஸ் பாரதி கேட்டபடி இழப்பீடாக 500 கோடி ரூபாய் தர முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More