Mnadu News

மன அழுத்தத்தை போக்கவும் யோகா அவசியம்:முதல் அமைச்சர் மான் வலியுறுத்தல்.

ஜலந்தரில் நடைபெற்ற யோகஷாலா நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா உள்பட 15 ஆயிரம் பேருடன் முதல் அமைச்சர்; மான் இணைந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.பின்னர் பேசியுள்ள முதல் அமைச்சர்; பகவந்த் மான்;,யோகா பண்டைய இந்திய நடைமுறையாகும். இது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்க உதவும்.ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மக்களை வலியுறுத்திய அவர், ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால், அது அவர் செய்யும் செயல்களிலும் பிரதிபலிக்கும்.கடவுள் இந்த வாழ்க்கையை நமக்குக் கொடுத்திருக்கிறார், அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எளிமையான வாழ்க்கையை நடத்துமாறும், தவறான விஷயங்கள் நமக்கு என்றும் வழிவகுக்காது என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.பஞ்சாப் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது, நேர்மறை ஆற்றல் நம்மைச் சுற்றி இருக்கும் என்று கூறி உள்ளார்.

Share this post with your friends