Mnadu News

மரகத நாணயம் குழுவின் சர்ப்ரைஸ்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த ராஜ், காலி வெங்கட் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் சரவணன் இயக்கத்தில் திபு நினன் தோமஸ் இசையில் 2017 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து, படத்தில் உழைத்த அனைவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்த படம் “மரகத நாணயம்”.

குறுகிய பட்ஜெட் இல் எடுக்கப்பட்டு நல்ல லாபத்தை பெற்று தந்தது. அமேசான் பிரைம்லும் இப்படம் நல்ல விலைக்கு வியாபாரம் ஆனது.

இப்படத்தில் இடம் பெற்ற “நீ கவிதைகளா”
திபு நினன் தோமஸ் இசையில் ஜி கே பி வரிகளில் யூடியூப் இல் பல மில்லியன் பார்வைகளை பெற்று அனைவரது பிடித்த பாடலாக இதுவரை உள்ளது. பிரதீப் குமார் மயக்கும் குரலில் மாயம் செய்தது. தற்பொழுது வீடியோ பாடலாக வெளியாகி ரசிகர்களை மேலும் மகிழ வைத்துள்ளது.

பாடல் லிங்க் : https://youtu.be/gV7dwGnWspE

Share this post with your friends