Mnadu News

மறையூரில் நடைபெற்ற சந்தனக்கட்டை ஏலம்;

இயற்கை சீற்றங்கள் மூலம் ஒடிந்து விழும் சந்தனமரங்களும், கடத்தலின்போது பறிமுதல் செய்யப்படும் சந்தன கட்டைகளும், கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மறையூரில் உள்ள சந்தன டிப்போவில் பாதுகாக்கப்பட்டு ஆண்டுக்கு இரு முறை ஏலம் விடப்படும். தற்போது ‘இ- ஏலம் முறையில் ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் 10,415 கிலோ சந்தனக்கட்டை விற்பனையானது. இதன் மூலம் அரசுக்கு 43 கோடியே 50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஏலத்தில் கர்நாடகாவை சேர்ந்த பொதுத்துறை நிறுவனம் ரூ.30 கோடி மதிப்பிலான சந்தன தைலத்தை வாங்கியுள்ளது. மேலும் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் ஏலத்தின் மூலம் அரசுக்கு சராசரியாக ரூ.100 கோடி வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends