Mnadu News

மலேசியாவில் பொதுத்தேர்தல்: நவம்பர் 19 இல் வாக்குப்பதிவு.

மலேசியாவில் ஆளும் கூட்டணியின் இடைக்கால அரசிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், புதிதாக தேர்தல் நடத்தி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நோக்கில் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் சாப்ரி யாகூப் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மலேசியாவில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 222 இடங்களுக்கு வரும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் நவம்பர் 5ஆம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரஷாக் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends