சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், நான் மழையை வைத்து அரசியல் செய்கிறேன் என்றால் மு.க.ஸ்டாலின் செய்தது என்ன?. மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட நிதியை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் சொட்டு நீர் கூட தேங்கவில்லை என திமுக வெளியிடும் செய்தி உண்மைக்கு புறம்பானது. மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை.
திமுக ஆட்சியில் படகில் தான் மக்கள் செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் கூட அமைக்கப்படவில்லை. என்று அவர் குறிப்பிட்டார்.
நியூயார்க்கில் இந்து கோயில் மீது தாக்குதல்
அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில் சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. உலகின் 2வது...
Read More