நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொளப்பாடு, பையூர், சித்தாய்மூர் ஆகிய பகுதிகளில் மழை பாதிப்பு காரணமாக முடங்கிய அறுவடை பணிகள் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் துவங்கியது. இந்நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக சாலையில் கொட்டி இருந்த நெல்மணிகள் முழுவதுமாக நனைந்து நெல்மணிகள் முளைத்தது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் இதற்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்கு பெரும்பாலான அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.