மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கம், தனது மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.இதற்கிடையே, சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷை காவல்துறையினர் கைது செய்து, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தாயை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More