புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மாநிலத்தின் அனைத்து கட்சிகளின் கோரிக்கையாகும். இந்த சூழலில் ஆளும் கட்சியாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சிககு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.நேரு தலைமையில் 60 அமைப்புக்கள் ஆலோசனையில் ஈடுபட்டன. இந்த அமைப்புகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை சட்ட பேரவையில் முதலமைச்சரிடம் அந்த அமைப்பினர் அளித்தனர். அதை பெற்று கொண்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி மாநில அந்தஸ்து இல்லாததால் பல விஷயங்களை செய்ய முடியாத நிலை உள்ளது என்றார். இதனால், அதிகமான மனஉளைச்சல் தான் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பலமுறை கேட்டும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு செவி சாய்க்கவில்லை.தற்போதும் அதே நிலை நீடிக்கிறது என்று என்.ரங்கசாமி தனது வேதனையை கொட்டியுள்ளார். தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More