கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42-வது திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்களில்,கல்வியைப் பொதுப் பட்டியலில் நீடிக்கச் செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது என்று தமிழக அரசும், பொதுப் பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டத் திருத்தம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் இல்லை என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வு, வரும் நவம்பர் மாதம் 7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More