மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக சட்டப் பேரவையில்; தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து பேசிய முதல் அமைச்சர் ஸ்டாலின் ,இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட நாடு. மொழி வாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டதால், அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
அமித்ஷாவின் பரிந்துரைகள் இந்தி பேசாத மக்களுக்கு எதிராக அமையும். தமிழ் மொழியை வளர்க்கவும், பிற மொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவே திமுக உருவானது. இந்தியை முன்னிலைப்படுத்தும் மத்திய அரசு பிற மாநில மொழிகளை கண்டு கொள்வதில்லை.
மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் இந்தியை மட்டும் இடம்பெற செய்வது கண்டிக்கத்தக்கது. 8வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க தயாரா?இன்று ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை திணிக்கும் திட்டமே இருக்கிறது.
இந்திக்கு இணையான அலுவல் மொழியாக தமிழ் உள்ளிட்ட மொழிகளை அங்கீகரிக்க வேண்டும். இருமொழி என்பதே தமிழக அரசின் கொள்கை. இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். ஒரே நாடு: ஒரே மொழி என்று கூறுவதன் மூலம் தேசிய மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தியா முழுவதும் ஹிந்தியை வலுப்படுத்த துடிக்கிறார்கள் என்று பேசினார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More