பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் நடிகர் கார்த்தி.

ஆனாலும், பல்வேறு தவறான கதை தேர்வுகள் அவரை தோல்வி பாதையில் அழைத்து சென்றன. அதில் இருந்து மீண்டு பல நல்ல படங்களை சமீப காலங்களில் தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார். அதற்கு இந்த வருடம் ஒரு சிறந்த உதாரணம். அவரின் கடின உழைப்புக்கு இது ஒரு நல்ல தருணம் என சொல்லலாம்.

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என ஹாட்ரிக் வெற்றிகளால் மகிழ்ச்சியில் உள்ளார் கார்த்தி. அதோடு, இந்த மூன்று படங்களுக்கு வெவ்வேறு விதமான உழைப்பு தேவை பட்டது. அதில் வென்று காட்டி உள்ளார் கார்த்தி. இந்த தொடர் வெற்றிகளால் அவரின் மார்கெட் மற்றும் சம்பளம் உயர்ந்துள்ளது. தற்போது கார்த்தியின் சம்பளம் 15 கோடிகள் என கிசுகிசுக்கப்படுகிறது.

தற்போது, கார்த்தி லிஸ்ட்டில் கைதி 2, சர்தார் 2, ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளன. அதோடு இன்னும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
