நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில், வரும் சனிக்கிழமை மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின்போது, பல்வேறு துறைகளில் பணிக்கு சேர்ந்த 75 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, அவர்களுக்கு மத்தியில் பிரதமர் உரையாற்றவும் இருக்கிறார்.
,நாட்டின் குடிமக்களின் நலன் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது போன்ற நாட்டு நலனில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் பொறுப்பை அவர் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
,ஏற்கனவே பல்வேறு துறைகளிலும் காலியாக இருக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இந்த புதிய வேலை வாய்ப்புகள் அனைத்தும் நாட்டின் 38 அமைச்சக மற்றும் துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More