Mnadu News

மார்க் ஆண்டனி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது “மார்க் ஆண்டனி”. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா முக்கிய ரோலில் நடித்துள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ப்ரீயட் படமாக உருவாகியுள்ள இந்த படம் இரண்டு காலக்கட்டங்களில் உருவாகியுள்ளது. அதாவது 1970 களில் நடப்பது போன்றும், 1990 களில் நடப்பது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே, வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியீட்டை படக்குழு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் சென்ற மாதம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. தற்போது படக்குழு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி, செப்டம்பர் 19 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க் ஆண்டனி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this post with your friends