மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது, அருகில் உள்ள வீடுகளுக்கும் மளமளவெனப் பரவியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் தகவல்களை வெளியுறவுத்துறை சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இந்தியத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More