மாவீரன் குழு :
“மண்டேலா” திரைப்படத்தின் மூலமாக கவனம் ஈர்த்தவர் “மடோன் அஸ்வின்”. தேசிய விருதை வாங்கி இன்னும் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர். இவரின் இயக்கத்தில், சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் “மாவீரன்” திரைப்படத்தில் இதுவரை அவர் ஏற்று நடிக்காத ரோலில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

அதன்படி, பத்திரிக்கை துறையில் பணியாற்றும் ஒரு காமிக் ஆர்டிஸ்டாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதே போல ஒரு கணமான ரோலில்அதிதி சங்கர் நடித்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு நடிகை சரிதா இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தாயாக நடித்து அதன் மூலம் ரி எண்டரீ கொடுத்து உள்ளார்.

பாடல்கள் வெளியீடு :
பரத் ஷங்கர் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி பெரும் கவனம் ஈர்த்து உள்ளன. மண்டேலா படத்திலேயே இவரின் இசை மற்றும் பின்னணி இசை பலரால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

டிரெய்லர் வெளியீடு தேதி :
ஜூலை 14 படம் வெளியாக உள்ள நிலையில், நாளை படத்தின் டிரெய்லர் வெளியாகும் என யாரும் எதிர்பாராத நேரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியானது.
