Mnadu News

மாவீரன் மக்கள் மனதை ஜெயித்தானா?

மடோன் அஸ்வின் இயக்கத்தில் லீட் ரோல்களில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் “மாவீரன்”. இவர்களோடு சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

சென்னையில் காலம் காலமாக வசிக்கும் பூர்வகுடி மக்கள் வளர்ச்சிக்காக நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு  அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படுகிறார்கள். சரியான முறையில் கட்டப்படாத அந்த கட்டிடத்தில் பல பிரச்சினைகள் எழுவதால், ஒரு கட்டத்தில் படத்தின் வில்லனாக (அமைச்சர்) வரும் மிஷ்கின் உடன் நேரடியாக மோதுகிறார் சிவா. 

மக்களை சிவா மாவீரனாக காத்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை. மொத்தமாக “மாவீரன்” மக்கள் மனங்களை வென்ற சூரன் என்றே சொல்ல வேண்டும். 

திரும்பும் பக்கமெல்லாம் மக்கள் “மாவீரன்” படத்துக்கு பாஸிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.  தற்போது வரை மாவீரன் படம் 9 இல் இருந்து 10  கோடிகள் வரை முதல் நாளில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிற்கார்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this post with your friends