Mnadu News

 மாவீரன் மூன்று நாட்கள் வசூல் இவ்வளவா ? 

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, சுனில், மிஷ்கின் போன்ற பலர் நடிப்பில் மூன்று நாட்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக திரை அரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது “மாவீரன்” திரைப்படம். 

ஃபேண்டசி கதையாக உருவாகியுள்ள மாவீரன், சிவகார்த்திகேயனுக்கு ஒரு புதிய பாதையை திறந்து விட்டுள்ளது எனலாம். கமர்ஷியல், ஆக்சன், சமூக அக்கறை என அனைத்தையும் குழைத்து கொடுத்துள்ளார் இயக்குநர். குறிப்பாக, படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத திரைக்கதையை கொடுத்து ரசிகர்களை கை தட்ட வைத்து. நாட்டில் உள்ள அரசியல் வாதிகளின் முகத்திரையை தோல் உரித்து காட்டி உள்ளார். 

மாவீரன் தமிழகம், தெலுங்கானா என ரிலீஸான அனைத்து இடங்களிலும் வசூல் அள்ளிக் குவித்து வருகிறது. ₹35 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள, மாவீரன் தற்போது வரை வெறும் மூன்றே நாட்களில் ₹30 கோடிகள் வரை ஈட்டி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே குவிந்து வருவதால் இந்த வசூல் மேலும் உயரும் என திரை அரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். 

Share this post with your friends