Mnadu News

மாவீரன் 10 நாட்கள் வசூல் நிலவரத்தை வெளியிட்ட தயாரிப்பு குழு!

“மண்டேலா” என்கிற முதல் படத்திலேயே தன்னுடைய தனித்துவ திரை மொழியால் பலரை திரும்பி பார்க்க வைத்தவர் “மடோன் அஷ்வின்”. சமூக பொறுப்புடன் இவர் இயக்கத்தில் ஓ டி டி நேரடி வெளியீடாக வெளியான மண்டேலா தேசிய விருதை தட்டி சென்றது. யோகி பாபுவை வேறு ஒரு புதிய கோணத்தில் காட்டி பல முன்னணி திரை துறை வல்லுனர்களையே மலைக்க வைத்தார் மடோன். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பத்து நாட்களுக்கு முன் வெளியானது “மாவீரன்”.

“மாவீரன்” படத்திலும் சிவாவை வேறு ஒரு புதிய வடிவத்தில் திரையில் காண்பித்து நல்ல சமூக பொறுப்புள்ள இயக்குனர் என்கிற கைதட்டல் வாங்கி உள்ளார். ஆம், எல்லா தரப்பு மக்களையும் இந்த “மாவீரன்” கவர்ந்து உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் நடிகை சரிதா, அதிதி சங்கர், குக் வித் கோமாளி புகழ் மோனிஷா, யோகிபாபு, இயக்குனர் மிஷ்கின் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அதேபோல் பரத்சங்கர் இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே மண்டேலா பட பாடல்கள் பெரும் வரவேறப்பை பெற்ற நிலையில், மாவீரன் பாடல்களும் அதே அளவில் ரீச் ஆகி உள்ளன.

கோழையான நாயகன் வீரனாக மாறி இறுதியில் மாவீரனாக உருவெடுப்பதே படத்தின் நாட். இதையே 2 மணி 46 நிமிட திரைக்கதையில் பல சுவர்ஷியங்களை ஒளித்து வைத்து திரையில் விளையாடி உள்ளார் மடோன். ஜூலை 14 அம் தேதி வெளியான மாவீரன் திரைப்படம் 10  நாட்களில் 75  கோடிகளை குவித்து வெற்றி வாகை சூடி உள்ளது “மாவீரன்”. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த வசூல் மேலும் உயர்ந்து 100 கோடிகளை கடக்கும் என திரை அரங்க உரிமையாளர்கள் தரப்பு கணித்து உள்ளனர்.

Share this post with your friends