“கோமாளி” படத்தின் மூலம் மனிதநேயம் தான் தலைசிறந்தது என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்து பிளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்தவர் இயக்குநர் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு இவரின் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள படம் தான் “லவ் டுடே”. இப்படத்தின் முதல் பார்வை வெளியானது முதல் இப்படத்துக்கு வரவேற்பு குவிய துவங்கியது. அடுத்தடுத்து இப்படத்தின் டீஸர், டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் கவர ரசிகர்கள் தற்போது இந்த படத்தின் வெளியிட்டு தேதியை உற்று நோக்கி உள்ளனர்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் அண்மையில் இணையத்தில் ஒரு செய்தி பரவி உள்ளது. அதாவது கோமாளி படம் வெளியானதும் நடிகர் விஜய்யை சந்தித்து ஒரு கதையை பிரதீப் சொன்னதாகவும் அது விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் கூறி அனைவரையும் அலற வைத்துள்ளார். விரைவில் இந்த கூட்டணி இணையலாம் என கிசுகிசுக்கள் பரவுகின்றன.