Mnadu News

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்திய குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய குழுவினர், இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர். சென்னை பட்டாளம் டிமெல்லோஸ் சாலையில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

பட்டாளத்தில் வெள்ளம் சூழ்ந்தது தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பார்வையிட்டனர். மத்திய குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More