மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியை தொடங்கியது. இரண்டு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய அந்த குழு இதுவரை, விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டு உள்ளன. எனினும், மீதமுள்ள 4 தொழிலாளர்களை காணவில்லை. தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More