Mnadu News

மினி கம்ப்யூட்டர் ஆனா ஸ்மார்ட் வாட்ச்!!

சமீப காலங்களில் ஸ்மார்ட் வாட்ச் (Smart watches) அணிவது என்பது இளைஞர்களின் இடையில் ட்ரெண்ட் ஆக மாறி வருகிறது.  இளைஞர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவது தங்களில் அன்றாட வாழ்வியலில் ஒன்றாக மாறிவிட்டது. வாட்ச் என்பது மணி பார்க்க மட்டும் பயன்படுத்துவதை தாண்டி இதய அழுத்தத்தை கண்காணிப்பது, ரத்த ஓட்டத்தினை கண்காணிப்பது, தூக்கத்தின் நேரத்தினை அளவிடுவது, போன் பேசுவது, இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட் வாட்ச்களில் வந்துவிட்டன.

மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் அணிந்திருப்பது ஒரு நவநாகரீக இளைஞனாக மற்றவர்களுக்கு காட்டும் என்பது பெரும்பாலோரின் எண்ணம். ஆரோக்கியத்தின் மீது நாள் முழுவதும் கவனம் செலுத்தக்கூடிய உபகரணமாக ஸ்மார்ட் வாட்ச் விளங்குகிறது. எனவே இதனை வாங்குவதற்கு இளைஞர்கள் மட்டும்மல்லாமல் ஆரோகியத்தை விரும்பும் பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனர்.  

கொரோனா தொற்றுக்கு இடையே ஸ்மார்ட் வாட்சுகள் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்து வருகின்றன.  மக்களிடைய உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆர்வம், உடல்நலனில் அக்கறை, ஸ்டைலாக இருப்து, தினசரி பணிகளை அறிவுறுத்தி உதவுவது என பல்வேறு காரணங்களுக்காக ஸ்மார்ட் வாட்சை அணிகிறார்கள்.

ஸ்மார்ட் வாட்ச் ஒரு மினி கம்ப்யூட்டர் போலவே செயல்படுகிறது. அதனால் இதன் விலையும் ஆண்ட்ராய்டு போனில் சரி பாதி விலை ஆகிவிடுகிறது.

2000 ரூபாயில் இருந்து லச்சக்கணக்கில் ஸ்மார்ட் வாட்ச் விற்பனையாகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும், போட், ஃபயர் போல்ட், ரியல்மி, அமாஸ்பிட், போட் ஸ்டார்ம் ஆகிய ஸ்மார்ட் வாட்சுகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

இந்தியாவின் ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் 80வகையான பிராண்ட்கள் விற்பனையில் உள்ளன, இதில் 10 வகையான பிராண்ட்கள் மட்டும் கடந்த ஆண்டில் சந்தையில் அறிமுகமானவை. சராசரியாக இந்தியாவில் ஒரு ஆண்டில்  12.2 மில்லியன் ஸ்மார்ட் வாட்ச் பயனாளிகள் உள்ளதாக ஒரு ஆய்வின் தகவல்.

2022 இல் இருந்து 2028 குள் 21.5% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் உயரும் என தற்போதைய ஆய்வின் தகவல். ஸ்மார்ட் வாட்ச் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

5 மில்லியன் மக்களின் தேர்வான பாயர் போல்ட் ஸ்மார்ட் வாட்ச் (Fire bolt smart watch) இரத்ததிலுள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் டைனமிக் இரத்த துடிப்பை துல்லியமாக காட்டக்கூடியது. இதிலுள்ள 1.69 இன்ச் ஃபுல் டிஸ்பிலே குவாலிட்டி மற்றும் மெட்டல் பாடி டைப்பை கொண்டது. இதனை ஒருமுறை ஜார்ஜ் செய்தல் 360 மணிநேரம் (8 நாட்கள்) வரை நீடித்து உழைக்க கூடியது. மேலும், இதில் அனைத்து விதமான உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் விலை 4,999 ஆகும். இது பல வண்ணங்களில்   கிடைக்கின்றன.

நோய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் (Noise smartwatch) TM டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. HD டிஸ்ப்ளே டச் ஸ்கிரீனுடன் இருக்கிறது. 10 நாள் பேட்டரி ஆயுள் கிடைக்கிறது.

இதில் இருக்கும் நாய்ஸ் ஃபிட் ஆப் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி அறிந்துக் கொள்ளலாம். இதில் வானிலை முன்னறிவிப்பு, அலாரம், ரிமோட் கண்ட்ரோல் கேமரா போன்ற ஸ்மார்ட் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இது நீரினால் பாதிக்கப்படாது. தூக்கம் மற்றும் மன அழுத்தத்தையும் கூட கண்காணிக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்.  

ஆப்பிள், ஓன் பிளஸ், ரெட்மி மற்றும் இன்னும் சில மடல்கள் ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்யில் முன்னணி வகிக்கின்றது.

Share this post with your friends