மருதமலை வனப்பகுதியில் இருந்து 8 யானைகள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளது.
அதில் 6 யானைகள் கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது, பின்னர் அங்கும் இங்கும் சுற்றிய யானைகள் திடீரென அருகே இருந்த துணை மின் நிலையத்தின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தன. யானைகள் உள்ளே வருவதை கண்ட லைன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கேங்மேன் மணிமாறன் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பிறகு காட்டு யானைகளை மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டினர். மின்சார வாரிய ஊழியர்களின் துரித நடவடிக்கையால் 6 யானைகளின் உயிரை காப்பாற்றப்பட்டதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கில் இந்து கோயில் மீது தாக்குதல்
அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில் சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. உலகின் 2வது...
Read More