மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவ.15-ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் பிப்.28-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கெடு இன்றுடன் முடிகிறது.இந்நிலையில் 1.50 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இது குறித்து கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், “ஏற்கனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2.67 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும். இதில் நேற்று (பிப்.27) மாலை வரை 1.50 கோடி பேர் மட்டுமே இணைக்காமல் உள்ளனர். மீதம் உள்ள அனைவரும் இணைத்துவிட்டனர். இன்று மாலையுடன் இந்தப் பணிகள் நிறைவு பெறும். எனவே இணைக்காதவர்கள் இன்று மாலைக்குள் இணைக்க வேண்டும். இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது.” என்று அவர் கூறினார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More