சின்னத்திரையில் இசையமைப்பாளராக தன் கலை பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, விஜய் நடித்த சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பலரின் படங்களுக்கும் இசையமைத்து உச்சத்தில் இருந்தார். தீடீரென்று, 2012 ஆம் ஆண்டு வெளியான “நான்” படத்தின் மூலம் ஹீரோவாகவும் அடுத்த பயணத்தை துவக்கினர். எல்லாரும் உனக்கு எதுக்கு இந்த வேலை என கேட்க அதை தமது படங்களின் வெற்றி மூலம் பதிலடி கொடுத்தார். ஆம், இவரின் கதை தேர்வுகளை பார்த்து வியந்தது திரையுலகம். தொடர்ந்து, சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, பிச்சைக்காரன் 2 என பல படங்களில் விஜய் ஆண்டனி நடித்து தற்போது பல முக்கிய ஹீரோக்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.
இதனிடையே அடுத்ததாக விஜய் ஆண்டனி ‘கொலை’ என்கிற படத்தில் நடித்துள்ளார். வரும் 21 ஆம் தேதி திரை அரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் போன்ற பல நல்ல நடிகர்கள் முக்கிய ரோல்களில் நடித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை டிரெய்லர் 2 என இன்னொரு நச் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. “எவ்வளவு தான் வாழ்க்கையில் ஜெயிச்சாலும் சாவு கிட்ட நிச்சயம் தோத்து தான் போவோம்” என்ற வசனத்துடன் டிரெய்லர் துவங்குகிறது. இதில் விஜய் ஆண்டனி துப்பறியும் நிபுணராக நடித்துள்ளார். நிச்சயம் இந்த படம் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.