தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேக்கரை பீட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எருமைசாடி சரக பகுதிக்குள் செந்நாய்கள் கடித்து இறந்த மிளாவில் இருந்து மீளாக்கறியை சட்டவிரோதமாக எடுக்கும் போது வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட காசிராஜன், ஆறுமுகம், இசக்கிமுத்து, ஐயப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து வேட்டைக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் மிளாகறி ஆகியவை பறிமுதல் செய்தனர்.