வாலி,குஷி,நியூ, போன்ற சிறந்த படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் எஸ் ஜே சூரியா. இவ்வளவு பெரிய வெற்றிகளை தந்த அவர் சில தோல்விகளால் நிலை குலைந்து போய் நின்றார். இயக்கிய, தயாரித்த படங்கள் சரிவர ஓடவில்லை இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்க இனி முழு முனைப்போடு நடிக்க துவங்கலாம் என்று தீர்மானித்து களத்தில் இறங்கினார்.
அவரை நடிக்க அணுகி சில இயக்குனர்கள் படையெடுக்க அப்போது ஆரம்பமானது அவரின் நல்ல எதிர்காலம்.
இறைவி, ஸ்பைடர், மெர்சல் என இந்த எல்லா படங்களுமே மெகா ஹிட் அடிக்க. அடுத்த ஒரு பெரிய சுற்றுக்கு ரெடி ஆனார் எஸ் ஜே சூரியா.
மாநாடு படம் தந்த அமோக வரவேற்பு அவரின் சம்பளமும், வாய்ப்புகளும் குவிய துவங்கின. தற்போது பொம்மை, மார்க் ஆண்டனி, RC15, இறவாக்காலம் போன்ற பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார். இவரின் சம்பளம் தற்போது 5 கோடிகள் என்கிறார்கள்.
இந்த நிலையில், 2015 க்கு பிறகு மீண்டும் அவர் இயக்குநர் அவதாரம் எடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் பெயர் “கில்லர்” என்றும் அவரே ஹீரோவாக நடித்து, தயாரிக்கவும் உள்ளார்.