மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் மாபெரும் வசூல் செய்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு தயாரிப்பு குழுவுக்கு லாபகரமாக அமைந்தது.
தனுஷ் இந்த படத்தில் அனிருத் இசையில் பாடல் எழுதி பாடியும் இருந்தார். எனவே அனைத்து பாடல்களும் வைரல் ஹிட் ஆனது.
2015 ஆம் ஆண்டு தனுஷ் இயக்குனராக அறிமுகமான படம் ” பவர் பாண்டி”. ராஜ்கிரண், ரேகா, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடிப்பில், ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும் ஹிட் அடித்தது.
தற்பொழுது தனுஷ் மீண்டும் ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்க போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு இசை அனிருத் எனவும் சொல்லப்படுகிறது. அண்மையில் வெளியான நானே வருவேன் திரைபடத்தின் கதை தனுஷ் எழுதியது என்பது குறிப்பிடதக்கது.