Mnadu News

மீண்டும் டிக் டாக்கில் வளம் வருகிறார் விஜய்

தமிழ் திரையுலகில் மக்கள் மத்தியில் அடுத்த சூப்பர் ஸ்டாராகவும் இளைய தளபதியுமாக வளம் வரும் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி நடிப்பில் வெளிவந்த வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் மெர்சல். இந்த படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தளபதி விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
80ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை இவர் நடிப்பில் அடிமையாகாத ஆட்கள் கிடையாது.

 

மேலும் தற்போது டிக் டாக் செயலியை அனைவரும் அதிகளவில் பயன்படுத்தும் ஒன்றாக உள்ளது. இதன் மூலம் ஒரு பிரபலமோ அல்லது பிரபல நடிகர் நடித்து பேசிய வசனங்கள் அல்லது பாடல்களை டப்பிங் செய்து பேமஸ் ஆகிவருகிறார்கள். இந்நிலையில் மக்கள் அதிகம் டப்பிங் செய்யும் வசனங்களும் பாடல்வரிகளும் நடிகர் விஜயுடையது என்பதால் அவரின் பெயரை அதாவது # விஜய் # தளபதி # என்றும் ஹேஷ் டாக்கள் வைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட பல லட்சம் பேர் இந்தஹேஷ் டாக்கை பயன்படுத்துகின்றனர். இதனால் தொடர்ந்து டிக் டாக்கில் முதலிடம் பிடித்து வளம் வருகிறார் தளபதி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends