தமிழகத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் என மொத்தம் 10 மீனவர்கள், தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது, ஐ.என்.எஸ்., பங்காராம் என்ற கப்பலில் வந்த இந்திய கடற்படையினர் சந்தேகத்தின் பேரில் படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். அந்நேரம் நடுக்கடலில் மழை பெய்து கொண்டிருந்ததால் கடற்படையினரின் எச்சரிக்கையை கவனிக்காமல் மீனவர்களின் படகு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த இந்திய கடற்படையினர், கப்பலில் இருந்தபடியே மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்; வீரவேல் என்ற மீனவர் மீது குண்டுபட்டது. ,துப்பாக்கி குண்டுகளால், தொடை மற்றும் அடி வயிற்றில் அவருக்கு காயம் ஏற்பட்டது.அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வீரவேல் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிiலியல், தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மரைன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி பிரிவின் கீழ் இந்திய கடற்படை வீரர்கள் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More