Mnadu News

முகம் சுளிக்கும் அளவிற்கு உடை அணிந்த ஆண்ட்ரியா, இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நடிகையாகவும் , பாடகியாகவும் வளம் வந்த நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் அவர் பாட சென்ற கல்லூரி விழாவில் உடுத்தி வந்த உடை பலரையும் முகம் சுளிக்க வைத்தது .

 

நடிகை ஆண்ட்ரியா பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார் .நடிப்பு மட்டும் அல்லாமல் மாடலிங் மற்றும் பாடகியாகவும் உள்ளார் . ஆனால் சமீப காலமாக இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு வராததால் கவர்ச்சியில் குதித்து விட்டார் போல . சினிமாவை பொறுத்த வரையில் நடிக்க தெரியவில்லை என்றாலும் கவர்ச்சியாக இருந்தால் அவர்களுக்கு பட வாய்ப்பு அதிகரிக்கும் என்பது தற்போது நிலைமையாக மாறியுள்ளது .

அந்த ஃபார்முலாவை பயன்படுத்து ஆண்ட்ரியாவும் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் . அதன் விளைவாக வடசென்னை உட்பட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் சில படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வி.ஐடி கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா உடுத்திவந்த ஆடைதான் நெட்டிசன்களை வறுத்தெடுக்க காரணமாக அமைந்தது. உள்ளாடை தெரியும் அளவிற்கு படும் மோசமாக உடை அணிந்து வந்தார் . 34 வயதை கடந்தும் இவ்வளவு கவர்ச்சியா என இணையதளத்தில் வேதனைப்படுகின்றனர் நெட்டிசன்கள்..

Share this post with your friends