சமூகத்தில் நிகழும் தவறுகளை, அநியாயங்களை தட்டி கேட்கும் கதைகளை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே மக்களுக்கான திரை படங்களாக தருவார்கள். அதில் ஒருவர் தான் மோகன் ஜி.
பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர். முதல் படம் வணிக ரீதியான வெற்றியை பதிவு செய்யவில்லை என்றாலும் விமர்சகர்கள் இதை கொண்டாடினார்.
அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘திரெளபதி’ ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் சர்ச்சை, விமர்சனம், வசூல் என அனைத்தையும் தன்னகத்தே பெற்று கொண்டது. இந்த இரு படங்களுக்கு பிறகு மோகன் ஜி அடுத்த யாரை வைத்து என்ன மாதிரி கதையை உருவாக்க போகிறார் என்ற ஆவல் எழுந்தது.
அப்பொழுது படத்தின் தலைப்பு “பகாசூரன்” என்றும் இதில் இயக்குநர் செல்வராகவன் லீட் ரோலில் நடிப்பார் என்றும், நட்டி ஒரு முக்கிய ரோலில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. தொடர்ந்து பல மாதங்களாக ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் ஷூட்டிங் முடிவடைந்தது. அதே
போல் டப்பிங் பணிகளும் முழுவதும் முடிந்துள்ளது என மோகன் ஜி ட்வீட் செய்து செல்வா உடன் பணியாற்றிய நாட்கள் மகிழ்ச்சியான தருணம் என குறிப்பிட்டு உள்ளார்.