வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முதலில் சிறப்பு தோற்றத்தில் வரும் வகையில் எழுதப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு முழு நீளமாக வரும் வகையில் மாற்றினார் வெற்றிமாறன். இதனால் படப்பிடிப்பு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது. இதனால் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவுள்ளனர்.
விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். மேலும் விரைவில் விடுதலை படம் திரைக்கு வருகிறது எனவும் கூறியுள்ளனர்.
விடுதலை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் விடுதலை படத்தை தயாரித்து வருகிறது.