Mnadu News

முதல்வரின் நாற்காலியில் அமர்ந்த மகன்..!புகைப்படம் வைரல் ..!!!

மராட்டிய மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில் அவருடைய மகன் எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டோவில் எம்பி ஸ்ரீகாந்த் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் பின்னால் மராட்டிய மாநில முதல்வர் என்ற போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் சூப்பர் முதல்வராக மாறி விட்டீர்களா? இந்த செயலுக்காக நீங்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது தான் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் முதல் மந்திரியின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்றும், தானேயில் உள்ள எங்களுடைய வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறியுள்ளார். நானும் என்னுடைய தந்தையும் எங்களுடைய வீட்டில் உள்ள அலுவலகத்தில் தான் பொதுமக்களை சந்திப்போம். முன்னாள் முதல் மந்திரியைப் போன்று ஒரே இடத்தில் இருக்காமல் என்னுடைய தந்தை ஒரு நாளைக்கு 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் உழைக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் உத்தரவ் தாக்கரே கொரோனா பெருந்தொற்றின் போது வீட்டில் இருந்தபடியே வேலை செய்தார் என்று பாஜகவினர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this post with your friends