பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 -ஆவது ஜெயந்தி விழா, 60 -ஆவது குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றுஇரவு மதுரை செல்லவிருந்தார். இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு நேற்றிரவே வீடு திரும்பினார். முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவரது பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேசமயம், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, இ. பெரியசாமி ஆகியோர் தேவர் குருபூஜையில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More